#CHILLACHILLA: 'துணிவு' படத்தில் இணைந்த அனிருத்.. பாடல் குறித்து வெளியான அசத்தல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிக்கும் துணிவு படத்தின் பாடல்  குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | BREAKING: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ? ஹீரோ யாரு? போடு வெடிய

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‌

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் பிரேம் குமார், வல்லவன், மஞ்சு வாரியர், பிக்பாஸ் அமீர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள 'சில்லா சில்லா' எனும் பாடலை அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார் என்றும் பாடலாசிரியர் வைசாக் இந்த பாடலை எழுதியுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக ஜிப்ரான் ட்வீட் செய்துள்ளார். மேலும் பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Also Read | THUNIVU: அப்டேட் இருக்கா?.. ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன துணிவு படத்தின் முன்னணி டெக்னீசியன்!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Chilla Chilla Song Sung by Anirudh Ghibran Musical

People looking for online information on Ajith Kumar, Anirudh, Ghibran, H Vinoth, Thunivu, Thunivu Chilla Chilla Song will find this news story useful.