நடிகர் அஜித்குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின் பாடல் படப்பிடிப்பு குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

Also Read | BREAKING: வெற்றிமாறன் இயக்கும் விடுதலை - 1.. ஷூட்டிங் அப்டேட்! பட ரிலீஸ் எப்போ?
நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.
இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்று வருகின்றது. நடிகர்கள் அஜித் குமார், மஞ்சு வாரியர், பிரேம் குமார், வல்லவன், பிக்பாஸ் அமீர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.
'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள 'சில்லா சில்லா' எனும் ப்ரோமோ பாடலின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர் சிபி புவன சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார். இந்த பாடலுக்கு நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.
இந்த ப்ரோமோ பாடலை அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார் என்றும் பாடலாசிரியர் வைசாக் இந்த பாடலை எழுதியுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read |நடிகர் கமல்ஹாசன் & இயக்குனர் மணிரத்னம் சந்திப்பு.. கூட இவங்க வேற இருக்காங்க! சூப்பர் ஃபோட்டோ