AK61 படத்தின் FIRST LOOK போஸ்டருடன் வெளியான மாஸ் டைட்டில்..நடிகர் அஜித்தோட லுக் தீய்யா இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

AK 61 படத்தின் தலைப்பும் முதல் லுக் போஸ்டரும் வெளியாகி  உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | புது கெட்-அப்பில் உலகநாயகன்.. கமலை சந்தித்த பிரபல நடிகர் & இயக்குனர்! வைரல் ஃபோட்டோ

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத்  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. விசாகப்பட்டினம் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில்  இந்த செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக படக்குழு விரைவில் பேங்காக் நகருக்கு விமானம் மூலம் புறப்படுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'துணிவு' என பெயரிடப்பட்டுள்ளது. முதல் லுக் போஸ்டரில் நடிகர் அஜித், முகத்தில் தாடியுடன் காதில் கடுக்கனுடன் நவநாகரீக தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சாந்தமான லுக்கில்  நாற்காலியில் அமர்ந்து இருப்பது போல போஸ்டர் அமைந்துள்ளது.

இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

 

Also Read | சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. ஷூட்டிங்கில் இணைந்த பிரபல முன்னணி நடிகை!

 

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Ajith Kumar H Vinoth AK 61 Movie Tittle Announced

People looking for online information on Ajith Kumar, Ajith kumar Thunivu, AK 61 Movie, AK 61 Movie Tittle Updates, AK 61 Thunivu Movie, H Vinoth will find this news story useful.