நடிகர் அஜித்தால், மஞ்சு வாரியர் வாங்கிய விலையுயர்ந்த பைக்.. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.

Advertising
>
Advertising

தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் பச்சையம்மாள் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது பொங்கலுக்கு ரிலீசான துணிவு படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று பொங்கலை முன்னிட்டு வெளியானது. இந்தத் திரைப்படம்  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகர்கள் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த BMW பைக் வாங்குவதை  வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும் "தைரியமாக ஒரு சிறிய படியை எடுத்து வைப்பது எப்போதும் ஒரு நல்ல இடம். நான் ஒரு நல்ல ரைடர் ஆவதற்கு முன் நீண்ட காலம் ஆகும், அதனால் நான் சாலையில் தடுமாறுவதை நீங்கள் பார்த்தால், தயவுசெய்து என்னுடன் பொறுமையாக இருங்கள் 😊🙏 என்னை போன்ற பலருக்கு உத்வேகமாக இருந்ததற்கு நன்றி #AK அஜித்குமார் சார்". என மஞ்சு வாரியர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித் உடன் சமீபத்தில் மஞ்சு வாரியர் இமயமலை பகுதிகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பைக் ஓட்டுவதற்கு உரிமம் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Actress Manju Warrier Bought New BMW Bike

People looking for online information on Ajith Kumar, Manju Warrier will find this news story useful.