இயக்குனர் H. வினோத்தை பிரபல சார்பட்டா பரம்பரை நடிகர் சந்தித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
![Thunivu Actor GM Sundar Met Director H Vinoth and Ghibran Thunivu Actor GM Sundar Met Director H Vinoth and Ghibran](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/thunivu-actor-gm-sundar-met-director-h-vinoth-and-ghibran-new-home-mob-index.jpeg)
Also Read | குட்டிக்கதை கேட்க ரெடியா? 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போ? எங்கே?
நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.
இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் துவங்கியது. நடிகர்கள் அஜித் குமார், மஞ்சு வாரியர், பிரேம் குமார், வல்லவன், பிக்பாஸ் அமீர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இயக்குனர் வினோத்தை பிரபல சார்பட்டா பரம்பரை நடிகர் ஜி.எம். சுந்தர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இசையமைப்பாளர் ஜிப்ரானும் உடன் உள்ளார்.
நடிகர் ஜி.எம். சுந்தரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் அஜித் படத்தில் இரண்டாவது முறையாக G.M. சுந்தர் நடிக்கிறார்.
ஜி.எம். சுந்தர், சார்பட்டா பரம்பரை படத்தில் துரைக்கண்ணு வாத்தியாராக நடித்தவர். GM சுந்தர், வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக ஐஜி வேடத்தில் அரசு கதாபாத்திரத்தில் நடித்தவர்.
இவர் ஏற்கனவே மண்டேலா, காதலும் கடந்து போகும் , மகாமுனி, சீதகாதி, விருமன் உள்ளிட்ட சமீப படங்களிலும், 80 களில் புன்னகை மன்னன், சத்யா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
Also Read | நாக சைதன்யா & வெங்கட் பிரபுவின் NC22.. பிரம்மாண்ட ஆக்சன் படப்பிடிப்பு! இந்த ஊர்லயா?