இதற்குத்தான் 22 வருசம் காத்திருந்தோம்.. விஜய் ரசிகர்கள் செம்ம குஷி! கேரளாவில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90' கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஜோடி என்றால் முதலில் நிற்பது விஜய் சிம்ரன் ஜோடி தான். விஜய் மற்றும் சிம்ரன் ஜோடியாக நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. நடனத்துக்கு பேர் போன இருவரும் சேர்ந்து பல படங்களில் பட்டய கிளப்பி உள்ளனர். இவர்களது நடிப்புக்கென்று பல ரசிகர்கள் இருந்தாலும்.இவர்களது நடனத்துக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.

ThullathaMamamumThullum will be Re-released on Dec 19th
Advertising
>
Advertising

அந்த வகையில் இவர்கள் சேர்ந்து நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். அனைத்து பாடல்களும் மாஸ் ஹிட். இப்படத்தை எழில் இயக்க, எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்து இருந்தார். தனது பாட்டு பாடும் திறமையை வெளியே காட்ட துடிக்கும் விஜய் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார். அவரது குரலுக்கு அடிமையானவர் சிம்ரன்,என்று கதை ஸ்வாரஸ்யத்தின் உச்சம்,இப்போது பார்த்தாலும் படத்தின் சுவாரஸ்யம் அப்படியே இருக்கும்.

ThullathaMamamumThullum will be Re-released on Dec 19th

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, தற்போது விஜய் சிம்ரன் ரசிகர்கள் சார்பாகவும் இந்த படத்தை கேரளாவில் உள்ள கலாபவன் திரையரங்கில் டிசம்பர் 19ஆம் தேதி காலை ஏழு மணிக்கு மீண்டும் ரிலீஸ் செய்யபடுகின்றது. ரீ-ரிலீஸ் போஸ்ட்டரை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

22 வருடத்திற்கு பிறகு இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ் நாட்டிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். நல்ல படங்களுக்கு எப்பவும் மவுசு உண்டு என்பதை நிரூபித்து உள்ளது இந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ThullathaMamamumThullum will be Re-released on Dec 19th

People looking for online information on Simran, ThullathaMamamumThullum, Vijay, Vijaysimranfans will find this news story useful.