தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், ஒரு காலத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகியோர் முன்னணியில் இருந்தனர்.
இருவரது திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போது, அவர்களின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வரிசையில், இவர்கள் இருவருக்கு பிறகு, அந்த இடத்தில் இருப்பது நடிகர்கள் விஜய் - அஜித் குமார் தான். சமூக வலைத்தளங்கள் அதிகம் மக்களிடையே பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை, இருவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் மோதிக் கொண்டே இருப்பது வழக்கம்.
அப்படி கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ள அஜித் குமார் மற்றும் விஜய் ஆகிய இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள். சமீபத்தில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், 'நண்பர் அஜித் குமார் மாதிரி டிரெஸ் பண்ணலாம்' என விஜய் கூறியிருந்தது, இருவரது ரசிகர்களின் மத்தியிலும் அதிக வைரலாகி இருந்தது.
இந்நிலையில், நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் குமார் ஆகியோர், தங்களது குட்டி ரசிகை ஒருவருடன் நிற்கும் பழைய புகைப்படம் ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தினை அவர்களது ரசிகர்கள் அதிகம் கொண்டாடி வரும் நிலையில், விஜய் - அஜித் ரசிகர்கள் மோதலை குறைக்க வேண்டும் என்றால், இருவரும் இணைந்து திரைப்படம் நடிக்க வேண்டும் என தமிழ் சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.