''தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும்.. என்னை பொறுத்தவரை..!" - 90-களில் ரஜினி பளீச் பதில்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த 90-களில் கொடுத்த பேட்டி ஒன்றில், தமிழர்கள் குறித்த தன் நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளார். 

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக புகழப்படுபவர் ரஜினிகாந்த். இவர் நடித்த படங்களை ஆல் டைம் ஃபேவரைட்டாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் தற்போது அண்ணாத்த படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் அரசியலில் நுழைவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 

இந்நிலையில் 1995-ல் தூர்தர்ஷன் சேனலுக்காக ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி, இப்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும் எனும் கருத்துக்கு உங்கள் பதில் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி கூறியதாவது, ''சரியாகதான் சொல்லியிருக்காங்க, தமிழ்நாட்டை ஒரு செட்டியாரோ, கவுண்டரோ, முதலியாரோ, தேவரோ, ஒரு பிராமினோ, நான் பிராமினோ வந்து ஆள வேண்டும்னு சொல்லவில்லையே, தமிழன் தான் ஆள வேண்டும் என்று தானே சொல்லி இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரைக்கும் தமிழ் பேசும் அனைவருமே தமிழர்கள்தான்.'' என பளீச் பதில் கொடுத்துள்ளார். 

''தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும்.. என்னை பொறுத்தவரை..!" - 90-களில் ரஜினி பளீச் பதில். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

தமிழர்கள் குறித்து ரஜினியின் பேட்டி | throwback interview of rajinikanth during 90s about tamils

People looking for online information on Annaatthe, Political entry, Rajinikanth will find this news story useful.