சிம்பு & ஹன்சிகா நடிக்கும் மகா.. படக்குழு வெளியிட்ட புதிய ரிலீஸ் தேதி! இதான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 ஹன்சிகாவின் 50 ஆவது படமான 'மஹா' ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

thriller is releasing in theatres on July 22 Maha From July22nd
Advertising
>
Advertising

தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதற்கடுத்து விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கு சினிமாவிலும் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்தார்.

நடிகை ஹன்சிகா தற்போது தனது 50வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘மஹா’என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உருவாகியுள்ளது. 

இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை ஜமீல் இயக்கியுள்ளார். அப்துல் மாலிக் தயாரித்துள்ளார். சிம்புவும் ஹன்சிகாவும் ஏற்கனவே வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

மஹா படம் தொடர்பாக சிம்பு, ஹன்சிகா ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. வரும் ஜூலை 22 ஆம் தேதி இந்த படம் திரையாங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்போடு புதிய போஸ்டர் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : Maha, Str, Hansika

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thriller is releasing in theatres on July 22 Maha From July22nd

People looking for online information on Hansika, Maha, Str will find this news story useful.