பிரபல நட்சத்திரம் CSK-வுடன் போட்ட தெறி கூட்டணி. இந்த வருடத்தின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வருடம் வெளியாகவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ரொமோ குறித்து ஒரு புதிய தகவல் தெரிய வந்துள்ளது. 

வருடா வருடம், இந்தியாவில் உள்ள க்ளப் அணிகளுக்காக நடத்தப்படும் விளையாட்டு போட்டிதான் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்தொடர், இந்த வருடம் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பியுள்ளது. இதற்கு முன்னர், வீரர்களை கொண்டு ஒரு ப்ரொமோ வீடியோவும் படமாக்கப்பட்டதாம். இந்த வீடியோவை ஒளிப்பதிவு செய்தவர் ஜார்ஜ் வில்லியம்ஸ். இவர் விஜய் நடித்த கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக கலக்கியவர்.  

 

தொடர்புடைய இணைப்புகள்

சி.எஸ்.கே-வுடன் ஒரு தெறி கூட்டணி | this year csk promo video for ipl is shot by theri dop

People looking for online information on Chennai Super Kings, George C Williams, IPL, MS dhoni, Theri, Vijay will find this news story useful.