"என் BIOPIC-ல இவர் நடிச்சா செம்மயா இருக்கும்!"... பிரபல தமிழ் ஹீரோ பேரை சொன்ன 'நம்ம' சின்ன தல 'ரெய்னா'!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா என்றாலே பிரபலம். குறிப்பாக தமிழர்களிடையே அவர் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.

அதற்கு முக்கிய காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் விளையாண்டதை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 'தல' என்றால் தோனி என்பதும், 'சின்ன தல' என்றால் ரெய்னா என்பதும் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அண்மையில் Behindwoods Gold Icons விருது விழாவில் கலந்து கொண்ட அவர், டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சமூக விருது வழங்கும் விழாவில் விளையாட்டு துறைக்கான குளோபல் ஐகான் விருதினை பெற்றார். இந்த விருது நிகழ்வில் மாஸ்டர் ஸ்டெப் போட்டு காட்டி அனைவரையும் மகிழ்வித்தார் ரெய்னா.

இதன் மூலம் சுரேஷ் ரெய்னாவுக்கு தமிழ் நடிகர்கள் பரீச்சயமானவர்கள் என்பது தெரிகிறது. இவ்வளவு ட்ரெண்டிங்கில் இருக்கும் சுரேஷ் ரெய்னா தற்போது தம்முடைய வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்தால் அருமையாக இருக்கும்  என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான “Believe: What Life and Cricket Taught Me” என்னும் புத்தகம் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து அவருடைய வாழ்க்கை வரலாற்று திரைப்படம் குறித்த கேள்விகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிகழ்வின் நேரலையில் ரெய்னா பதில் அளித்திருக்கிறார்.

ALSO READ: 'ரஷ்மிகாவ பாத்தே ஆகணும்!'.. ஊரடங்கில் 900 கி.மீ பயணித்த ரசிகர்!..  கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

அதன்படி தன்னுடைய வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தம் நண்பர் சூர்யா நடித்தால் சூப்பராக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார் சுரேஷ் ரெய்னா‌. சூர்யா நடித்த சில திரைப்படங்களை, தான் பார்த்துள்ளதாகவும் அவர் தன்னுடைய கேரக்டரை அச்சாக பிரதிபலிப்பார் என்றும் கூறியிருக்கிறார். 

"என் BIOPIC-ல இவர் நடிச்சா செம்மயா இருக்கும்!"... பிரபல தமிழ் ஹீரோ பேரை சொன்ன 'நம்ம' சின்ன தல 'ரெய்னா'! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

This popular tamil hero is suresh raina choice for his biopic

People looking for online information on RainaBioPic, Suresh Raina, Suriya will find this news story useful.