சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் பிக்பாஸ் பிரபலம்.. படப்பிடிப்பில் மாஸ்-ஆக வந்த போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் மாநாடு படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலத்துடன் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிக்கும் இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு பிசியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் அண்மையில் வெளியான போஸ்டர்களும் ஹிட் அடித்தது. 

இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட டேனியலுடன் சிம்புவின் சூப்பர் கூல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்ஸ் குவித்து வருகிறது. 

இன்று முதல் படப்பிடிப்பில் இணைவது குறித்து நடிகர் டேனியலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மாநாடு திரைப்படத்தில் பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷினி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மாநாடு படத்தில் பிக்பாஸ் பிரபலம் | this popular biggboss actor with silambarasan tr in maanaadu goes viral

People looking for online information on Daniel Annie Pope, Maanaadu, Silambarasan TR, Simbu will find this news story useful.