இந்தியாவின் 30க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பைக்கிலேயே பயணம் செய்த தல அஜித்! வெளியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது.

Advertising
>
Advertising

வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தல அஜித் தற்போது வட இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தல அஜித் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. மேலும் தல அஜித் தனது குடும்பத்துடன் ஜெய்பூரில் நாட்களை செலவிட்டார். அந்த புகைப்படங்களும் சில தினங்களுக்கு முன் வைரலானது. அதனைத்தொடர்ந்து, தல அஜித் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாபின் வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் (Border Security Force) எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின. பின்னர் ராஜஸ்தான் பகுதியில் ஒரு மலையின் உச்சியில் தல அஜித் நிற்கும் படங்கள் இணையத்தில் வைரலாகின. 

இந்நிலையில் தல அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை தல அஜித் பைக்கில் பயணம் செய்து கடந்த 10 மாதங்களாக 3 கட்டமாக சென்ற ஊர்களின் வரைபடத்தையும் எந்த வழியாக அந்த ஊர்களை அடைந்தனர் என்பதையும் இந்திய வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் 30க்கும் மேற்பட்ட நகரங்களை பைக் மூலம் சாலை வழியாகவே கடந்துள்ளார் தல அஜித். 

தொடர்புடைய இணைப்புகள்

This places travelled on motorcycle by Thala Ajithkumar

People looking for online information on Ajith Kumar, Valimai will find this news story useful.