இந்த வாரம் பிரபல OTT-க்களில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த அக்டோபர் மூன்றாம் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் முக்கிய படங்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

Advertising
>
Advertising

Also Read | வில்லன் ரோலில் சிவகார்த்திகேயன்? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்!

கணம்

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள கணம் படத்தில் அமலா, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையைச் சார்ந்த திரைப்படம் இது. டைம் டிராவலை அடிப்படையில் இந்த படம் வெளியாகி உள்ளது. சோனி லிவ் தளத்தில் கடந்த அக்டோபர் 19 முதல் வெளியாகி உள்ளது. 

அம்மு

சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார். இதில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, நவீன் சந்திரா, சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பரபரப்பான கதையையும், அவள் அதை விட்டு வெளியேறும் பயணத்தையும் விவரிக்கிறது.

அம்மு திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது.

பிரம்மாஸ்திரா

ரன்பீர் கபூர் & ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்திரா பார்ட் ஒன்: ஷிவா', பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்தப் படம் ‘தி அஸ்ட்ராவர்ஸ்’ என்ற ட்ரைலஜியின் முதல் பாகம் ஆகும்.

இப்படத்தில் ரன்பீர் மற்றும் ஆலியா தவிர, அமிதாப் பச்சன் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Disney+ Hotstar தளத்தில் வரும் 23 அக்டோபர் 2022 முதல் ஒளிபரப்பாக உள்ளது.

பிம்பிசாரா

நந்தமுரி கல்யாண் ராமின் ஃபேன்டஸி ஆக்‌ஷன் டிராமா படமான பிம்பிசாரா ஆகஸ்ட் மாதம் வெளியானது.

பிம்பிசாரா படம் ஜி5 ஓடிடியில் இன்று வெளியாகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு கொடூரமான, குளிர் ரத்தம் கொண்ட மன்னன், தற்போது ஹைதராபாத் நகரத்தில் இறங்குவதைச் சுற்றி இப்படம் அமைந்துள்ளது.

லைகர்

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்   (ஆகஸ்ட் 25, 2022)  உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் வெளியானது.

இந்த அதிரடி ஆக்சன்  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார். பிரபல உலக குத்துசண்டை வீரர்  மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் இந்த படம் இன்றிரவு (20.10.2022) முதல் ஒளிபரப்பாக உள்ளது.

Also Read | இந்த வருட தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் லிஸ்ட்! ஒரு பார்வை

This October 3rd week OTT Release Movies Full details

People looking for online information on October 3rd week OTT Release Movies, OTT Release Movies will find this news story useful.