அட.. பிக்பாஸ் சனம்-ஆரி-அனிதா இடையே இப்படி ஒரு ஒற்றுமையா.?!! எப்படி எல்லாம் நோட் பண்றாங்க.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே இருக்கும் ஒற்றுமை குறித்து ஒரு மீம் வைரல் ஆகி வருகிறது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் ஆரி வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலாஜி முருகதாஸ் ரன்னராக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து பிக்பாஸ் கொண்டாட்டம் தற்போது நடந்து முடிந்துள்ளது. 

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற ஆரி - சனம் - அனிதா இடையே இருக்கும் ஒரு ஒற்றுமை குறித்து செம மீம் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. இத்துடன் மூவரும் எடுத்து கொண்ட புகைப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

ஆரி - சனம் - அனிதா மூன்று பேரின் பிறந்தநாளும் ஒரே நாளில் வருவதை ரசிகர் ஒரு குறிப்பிட்டு இந்த மீமை உருவாக்கியுள்ளார். பிப்ரவரி (ஆரி), நவம்பர் (சனம்), ஜூன் (அனிதா) என வெவ்வேறு மாதங்களில் பிறந்திருந்தாலும், மூவரின் பிறந்தநாட்களும் சரியாக 12-ஆம் தேதியில் அமைந்திருக்கிறது. 

இந்த தற்செயலான விஷயத்தை க்யோட் செய்து மீமை உருவாக்கியிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ். இதை கண்ட ரசிகர்கள், அட, ஆச்சர்யமாக இருக்கிறதே என கமன்ட்ஸ் போட்டு வர, இன்னொரு பக்கம் ''எப்படி எல்லாம் நோட் பண்றாங்க பாருங்க'' என வைரல் அடித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை | this meme of coincidence on biggboss sanam aari anitha goes viral

People looking for online information on Aari, Anitha Sampath, Sanam Setty will find this news story useful.