ஜெய்பீம் விவகாரம்: "எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி" - நடிகர் சூர்யா நெகிழ்ச்சி டிவீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

this love for #Jaibhim is overwhelming - says suriya
Advertising
>
Advertising

'ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் சில சர்ச்சைகளையும் கிளப்பியது, படத்தின் காலண்டர் சர்ச்சை குறித்து பாமக கட்சி சார்பில் அன்புமனி MP அறிக்கை வெளியிட்டார். இதற்கு சூர்யாவும் பதில் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவளித்து சினிமா துறையினர், அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

this love for #Jaibhim is overwhelming - says suriya

#WeStandWithSuriya என்ற டிவிட்டர் Hashtag டிரெண்ட்டாகி வருகிறது, இதனிடையே நடிகர் சூர்யா டிவிட்டரில் டிவீட் செய்துள்ளார். அதில் "ஜெய்பீம் மீதான இந்த அன்பு அலாதியானது. இதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி" என குறிப்பிட்டு டிவீட் செய்துள்ளார்.

Tags : Suriya

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

This love for #Jaibhim is overwhelming - says suriya

People looking for online information on Suriya will find this news story useful.