விசில் போடு! அடுத்த CSK போட்டியில் ரசிகர்களை குஷியாக்கும் கோலிவுட் நடிகர்! யார்னு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

14-வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கியது. முதல் 29 ஆட்டங்கள் நடந்த நிலையில் கொரோனா காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 14-வது IPL கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. மீதி 31 ஆட்டங்கள் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியை வீழ்த்தியது. புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வரும் செப்டெம்பர் 24 ஆம் தேதி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வர்ணனையாளராக பிரபல நடிகரும், ரேடியோ ஜாக்கியுமான ஆர் ஜே பாலாஜி கலந்து கொள்ள இருப்பதாக, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. சென்னை அணியின் ரசிகரான இவரின் காமெடியான வர்ணனைக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.  இவர் கடைசியாக இவர் முக்கிய வேடத்தில் நடித்த எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து இயக்கிக்கொண்டிருக்கிறார்.

Tags : RJ Balaji

தொடர்புடைய இணைப்புகள்

This Kollywood celebrity makes a sudden announcement!

People looking for online information on RJ Balaji will find this news story useful.