இந்த வாரம் பிரபல ஒடிடிக்களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'.. இதான் தெலுங்கு தலைப்பா? ஆஹா இதுவும் செம்ம மாஸா இருக்கே!

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், இந்த ஜூலை மாதம் 3வது வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'மாமனிதன்'

'மாமனிதன்' திரைப்படம் கடந்த ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தர்ம துரை படத்துக்கு அடுத்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி மாமனிதன் படத்தில் இணைந்துள்ளனர்.

மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான YSR பிலிம்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து இருந்தார். ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் இந்த படம் தமிழகம் மற்றும் கேரளாவில் வினியோகம் செய்யப்பட்டது. மாமனிதன் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் மாமனிதன் படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமையை ஆஹா ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த ப்டம் இன்று (15.07.2022) முதல் ஆஹா ஒடிடியில் வெளியாகி உள்ளது.

"வீட்ல விசேஷம்"

இந்த திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்றது.  இப்படத்துக்கு இந்திய சென்சார் போர்டு மூலம் U சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்ல  விஷேசம் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா RK எடிட்டிங் பணிகளை மேற்கொண்டார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்தார்.

இந்த படம் ஜி5 ஒடிடியில் இன்று ஜூலை 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. ஜி5 பிரிமியம் அக்கவுண்டிற்கு முதல் கட்டமாக இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாஷி

டோவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இயக்குனர் விஷ்ணு ஜி ராகவின் 'வாஷி' திரைப்படம் ஜூலை 17 ஆம் தேதி OTT தளமான நெட்ஃபிக்ஸ் இல் வெளியிடப்படுகிறது.

இந்த படம் ஜூன் 17 அன்று திரையரங்குகளில் வெளியானது. டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் படத்தில் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் இந்து பெண்ணாக மாதவியாகவும், தாமஸ் எபின் மேத்யூ என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திலும் நடித்தனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கற்பழிப்பு வழக்கில் எதிரெதிர் பக்கங்களில் நின்று, அவ்வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்று இருவருமே உறுதியாக போராடுவதே படத்தின் கதை.

Also Read | சந்திரமுகி - 2 ஷூட்டிங்.. ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய லாரன்ஸ்.. நெகிழ்ச்சி பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

This July 3rd week OTT Release Movies Aha Tamil Zee 5 Netflix

People looking for online information on Aha Tamil, Netflix, OTT Release Movie, Zee 5 will find this news story useful.