இந்த வாரம் பிரபல OTT- களில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப் சீரிஸ்.. முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

Advertising
>
Advertising

Also Read | 'துணிவு' படத்தில் டேவிட் பில்லாவா?.. ஆமா அந்த சீன்ல வந்துச்சுல! வைரலாகும் H. வினோத் Detailing!

லத்தி

விஷால், சுனைனா நடிக்கும் 'லத்தி' படத்தை புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார்.

லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்துள்ளனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்தது.

பாலசுப்ரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு  யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இன்று (13,01 .2023) இந்த படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகி உள்ளது.

த்ரிஷ்யம் 2

அஜய் தேவ்கன், ஸ்ரேயா மற்றும் தபு நடித்த ஹிந்தி க்ரைம் த்ரில்லர் படமான த்ரிஷ்யம் 2, இன்று ஜனவரி 13, 2023 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.  மலையாளத் திரைப்படமான த்ரிஷ்யம்-2 படத்தின் இந்தி ரீமேக் தான் த்ரிஷ்யம் 2. தற்செயலாக ஒரு குற்றத்தைச் செய்த குடும்ப உறுப்பினர்களை, சட்டத்தின் இருண்ட பக்கத்திலிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு குடும்ப தலைவனின் கதை தான் த்ரிஷ்யம் 2.

வரலாறு முக்கியம்

நடிகர் ஜீவா, நடித்த இந்தத் திரைப்படம் டிசம்பர் 9, 2022 அன்று திரையரங்குகளில் வெளியானது, வரலாறு முக்கியம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஜனவரி 15 அன்று வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்

அபினவ் சுந்தர் நாயக் இயக்கிய, முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ், வினீத் சீனிவாசன் நடித்த மலையாள டார்க் காமெடி படம் ஆகும். இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இன்று ஜனவரி 13 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

Also Read | 'வாரிசு' படத்தில் குஷ்பு நடித்த காட்சிகள் ஏன் இல்லை? எடிட்டர் பிரவீன் KL EXCLUSIVE பதில்!

This January Pongal week OTT Release Movies Web series list

People looking for online information on January Pongal OTT Release Movies, OTT Release Movies will find this news story useful.