நேற்று பால் கேட்ச் டாஸ்க்கின் அடிப்படையில் போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்தி கொள்ள வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தார். இதையடுத்து போட்டியாளர்களுக்குள் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று கடைசியில் வாக்கெடுப்பு அடிப்படையில் அவர்களுக்கான இடம் நிர்ணயம் செய்யப்பட்டது. முதல் இடத்தில் ரியோ, 2-வது இடத்தில் ரம்யா, மூன்றாவது இடத்தில் சோம் என சோம் அணியை சேர்ந்த மூவர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஆனால் அதே அணியை சேர்ந்த கேப்ரியலாவுக்கு கடைசி இடம் கிடைத்தது. அவர் நன்றாக விளையாடி 64 பாயிண்ட்ஸ் எடுத்து இருந்தார். ஆனாலும் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அவரின் அணியை சேர்ந்த ரியோ, ரம்யா, சோம் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். முதல் இடத்தில் நின்ற ரியோ 64 பாயிண்ட்ஸ் எடுத்திருந்தார். அதேபோல சம அளவில் ஸ்கோர் செய்த கேபிக்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை.
கேப்ரியலா 7-வது இடத்துக்கு நின்றபோது அவரின் அணியை சேர்ந்த ரம்யாவே அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதேபோல சோம், ரியோ உள்ளிட்டவர்களும் அவருக்கு சப்போர்ட் செய்யவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் விளையாட்டை சொதப்புன சோம், பாலாஜிக்கு மூணாவது, நாலாவது இடம் கெடைச்சுருக்கு. ஆனா நல்லா விளையாடுன கேபிக்கு கெடைக்கல. இதெல்லாம் எந்த ஊரு நியாயம்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.