"நடிக்க ஆள் இல்லனு கூப்டாங்க😅" - ‘விடுதலை’ பவானி ஸ்ரீ இப்படிதான் நடிப்புத்துறைக்கு வந்தாரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.
விடுதலை படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும்,  ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது.
பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன்(சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியும் பிரபல இசைக்கலைஞர், நடிகர் ஜீ.வி.பிரகாஷின் சகோதரியுமான, பவானி ஸ்ரீ, தான் நடிக்க வந்தது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பேசும்போது, “என் குடும்பத்தில் அனைவரும் இசை கலைஞர்களாக உருவெடுத்தனர். எனக்கு அதில் ஆர்வம் இருந்தது. ஆனால் இசை கலைஞராக வேண்டும் என்று அதீத வேட்கை இருந்ததில்லை. நான் என்ன துறையை தேர்ந்தெடுக்கிறேன் என்பதை கண்டுபிடிக்கவே எனக்கு நீண்ட காலம் பிடித்தது. போட்டோகிராபராக இருந்தேன், பிறகு திரைப்படம் உருவாக்கும் ஆர்வம் இருந்தது. சில திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.

அப்போது என் போன்ற சக உதவி இயக்குனர்கள் நடிப்பதற்கு ஆள் இல்லை எனும் பொழுது என்னை அணுகினார்கள். அவர்களின் குறும்படங்களில், திரைப்படங்களில் நடிக்க கேட்பார்கள். அவற்றைச் செய்யும்போது நான் மிகவும் விரும்பினேன். இப்படித்தான் நான் நடிக்க வந்தேன். விடுதலை திரைப்படத்தைப் பொறுத்தவரை வெற்றிமாறன் சார் தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவார். ஒரு சிறிய கதாபாத்திரமாக என்றாலும் கூட அது அழுத்தமாக இருக்கும். எனவே அவருடைய திரைப்படத்தில் நடித்தது மிகப்பெரிய விஷயமாக எனக்கு இருந்தது” என்று குறிப்பிட்டார்.

"நடிக்க ஆள் இல்லனு கூப்டாங்க😅" - ‘விடுதலை’ பவானி ஸ்ரீ இப்படிதான் நடிப்புத்துறைக்கு வந்தாரா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

This is how Viduthalai actress Bhavani Sre came into acting

People looking for online information on Bhavani Sre, Viduthalai will find this news story useful.