இந்தியில் தனுஷ்க்கு கிடைத்த வரவேற்பை பாருங்க.. SCREEN SHOT போட்டு கொண்டாடும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தின் மூலம் நடிகர் தனுஷை 2013 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.

Advertising
>
Advertising

இவர் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடித்துள்ள படம் அத்ரங்கி ரே. இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், கலர் யெல்லோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மதுரை மற்றும் வட இந்திய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நடிகை சாரா அலிகான், நடிகர் அக்ஷய் குமார் தனுஷடன் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை A. R ரகுமான், இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர்கள் சாரா அலிகான், அக்ஷய் குமார், தனுஷ் ஆகியோர் தங்களது சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். மோஷன் போஸ்டர் வெளியாகி கிட்டத்தட்ட 24 மணி நேரம் கடந்த நிலையில், தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தனுஷ் மற்றும் அக்சய் குமாரின் மோஷன் போஸ்டர் சம்பந்தப்பட்ட டிவீட் உடைய ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, 24 மணி நேரத்தில் அக்ஷய் குமாரை விட தனுசுக்கு அதிக ரீ டிவீட்க்களும், லைக்கும் வந்துள்ளன என கூறி வருகின்றனர். 

‘அத்ரங்கி ரே’ படம் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் கிறிஸ்மஸ் பாண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. தமிழிலும் இந்த படத்திற்கு தனுஷ் டப்பிங் பேசியுள்ளதால் தமிழிலும் வெளியாக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த படத்தின் டிரெய்லர் இன்று (24.11.2021) வெளியாக உள்ளது.

 

தொடர்புடைய இணைப்புகள்

This is Dhanush Power .. Fans excited to share the photo

People looking for online information on Akshay Kumar, Dhanush will find this news story useful.