சிவகார்த்திகேயன் நடிக்கும் DON படத்தின் ஷூட்டிங்கை முடித்த முன்னணி நடிகர்! மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த சனிக்கிழமை அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.

விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம். குழந்தைகள் கடத்தல் பற்றிய இந்த படத்தின் பிளாக் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 15.41 கோடி ரூபாயை டாக்டர் படம் வசூலித்துள்ளது.

டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் நடிக்கும் அடுத்த படம் டான். இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.  இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டது. பின் சமீபத்தில் மீண்டும் பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால், கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி டிவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை இட்டு, நடிகர் S J சூர்யா, தான் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் நடித்து முடித்துவிட்டதாக இயக்குனர் ட்விட் செய்து அறிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் முன்பே இயக்குனர் சிபி அறிவித்துள்ளார். டியூனி ஜான் இந்த படத்தின் போஸ்டரை வடிவமைக்கிறார்.

இவர் புஸ்பா, ஜகமே தந்திரம், மாறன் படங்களின் போஸ்டரை வடிவமைத்தவர் ஆவார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

This famous kollywood actor finished his portions in Don Movie

People looking for online information on Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.