மெகா ஹிட் அடித்த முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்... சசிகுமாரை இயக்க்கும் பிரபல இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் மிகுந்த பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் 'முந்தானை முடிச்சு'. 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. குடும்பம் குடும்பமாக தமிழக மக்களை தியேட்டருக்கு படையெடுக்க வைத்த ஒரு படம். இப்படி பல பெருமைகளை கொண்ட இந்த படம் தற்போது 37 ஆண்டுகள் ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்திற்காக பாக்யராஜ், நடிகர் சசிகுமாருடன் கைகோர்த்திருக்கிறார்.  இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் ஆகியவற்றை பாக்யராஜ் பொறுப்பேற்கிறார்.

மேலும் இந்த படத்தை ஜே எஸ் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இளம் இயக்குனர் பாலாஜி இயக்குகிறார். கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனாலும் மெகா ஹிட் அடித்த இந்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்பது தெரியாமலே இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் அதிரடி தகவல் என்னவென்றால் சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதேபோல் சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தினையும் எஸ்.ஆர் பிரபாகரன்தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

This director to remake mundhanai mudichu முந்தானை முடிச்சு ரீமேக் இயக்குனர்

People looking for online information on Mundhanai Mudichu, Sasikumar will find this news story useful.