இந்த வாரம் கிறிஸ்துமஸ்-க்கு OTT- யில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரபல ஓடிடி-க்களில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Advertising
>
Advertising

Also Read | "அவர One Side-ஆ Love பண்றேன்".. விக்ரமன பதிலுக்கு BiggBoss கொடுத்த செம Thug Life!!..😅

காரி (தமிழ்)

ஹேமந்த் குமார் இயக்கிய இந்த படத்தில் நடிகர் சசிகுமார், ஜேடி சக்ரவர்த்தி மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாரம்பரிய ஜல்லிக்கட்டு  பந்தயத்தின் போது ஒரு மாடுபிடி வீரர், ஒரு எளிய கிராமத்து பெண் மற்றும் ஒரு பணக்காரர் என மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஜல்லிக்கட்டு எவ்வாறு பின்னிப்பிணைக்கிறது என்பதே காரி படத்தின் கதைக்களம். Zee5 தளத்தில்  23 டிசம்பர் 2022 அன்று இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜெய ஜெய ஜெய ஜெய ஹே (மலையாளம்)

விபின் தாஸ் இயக்கிய இந்த மலையாளத் திரைப்படம், தனது கல்லூரி படிப்பை முடிப்பதில் ஆர்வமுள்ள ஒரு இளம் மணப்பெண்ணைப் பற்றியது. திருமணமாகி  கணவனால் கேலி செய்யப்படும் மணமகள் தனது கல்வியை முடித்து, சமூகத்தில் உயர்வதை காமெடி டிராமா வகைமையில் சொல்கிறது.  இப்படத்தில் பாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், மஞ்சு பிள்ளை மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் தற்போது Disney Plus Hotstar தளத்தில் 22 டிசம்பர் 2022 முதல் ஒளிபரப்பாகிறது.

தி டீச்சர் (மலையாளம்)

அமலா பால், ஹக்கிம் ஷா, செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் தி டீச்சர்.  உடற்கல்வி ஆசிரியரின் தனிப்பட்ட வீடியோ பரவுவதால் ஏற்படும் விளைவுகளை படம் பேசுகிறது. விவேக் இயக்கிய இந்த திரைப்படம் த்ரில்லர் ஜானரில் அமைந்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் 23 டிசம்பர் 2022 அன்று ரிலீஸ் ஆகிறது.

Glass Onion: A Knives Out Mystery

Glass Onion: A Knives Out Mystery ரியான் ஜான்சன் எழுதி இயக்கிய  அமெரிக்க ஹாலிவுட் திரைப்படமாகும். இது 2019 ஆம் ஆண்டு வெளியான Knives Out திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். ஜேம்ஸ் பாண்ட் புகழ் நடிகர் டேனியல் கிரெய்க், எட்வர்ட் நார்டன், ஜானெல்லே மோனே மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் 23 டிசம்பர் 2022 அன்று இந்த படம் வெளியாக உள்ளது.

Also Read | "சாப்பிடலையா சார்".. இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல் குறித்து உதயநிதி நெகிழ்ச்சி!

This December Christmas Weekend OTT Release Movies

People looking for online information on Christmas Weekend OTT Release, OTT Release Movie, Weekend OTT Release Movie will find this news story useful.