குக் வித் கோமாளி பிரபலத்துக்கு ஏற்பட்ட திடீர் விபத்து.. அவரே வெளியிட்டுள்ள பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு அறிமுகம் என்பதே தேவையில்லை. மிக பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் உருவாகி விட்டது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில்மணிமேகலைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே  உருவாகியிருக்கிறது. இந்நிலையில் மணிமேகலைக்கு சமீபத்தில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இது பற்றி அவர் கூறும்போது "ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை 🐒 சமீபத்துல படிச்சேன். நல்லா இருந்தது இந்த வரிகள். எனக்கு சின்ன விபத்து ஏற்பட்டுள்ளது. இப்பொது கொஞ்சம் நலமாக தான் இருக்கிறேன். அடுத்து இரண்டு வாரத்துக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர முடியாது என்பதை நினைக்கும் போது கஷ்டமா இருக்கு. எனது குழுவினரை நிச்சயம் மிஸ் பண்ணுவேன். ஒரு வாரத்தில் திரும்பி வந்துடுவேன். உங்கள் உடல் நலனை கவனித்து கொள்ளுங்கள். முக்கியமா சுடு தண்ணி தூக்கும்போது பாத்து தூக்குங்க" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

This cwc contestant met with an accident குக் வித் கோமாளி பிரபலத்துக்கு விபத்து

People looking for online information on Manimegalai will find this news story useful.