இந்த வாரம் குக் வித் கோமாளி நிகச்சியில் இவர் இல்லையா.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு அறிமுகம் என்பதே தேவையில்லை. மிக பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் உருவாகி விட்டது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் சிரித்து சிரித்து ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்க வைக்கிறது. ஒவ்வொரு வாரமும் இந்த  ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கிறதே இந்த நிகழ்ச்சியின் சக்ஸஸ் தான்.

இந்த சீசனை பொருத்தவரை ஒவ்வொரு போட்டியாளரும் ஒருவகையில் ஆச்சரியத்தை அளிக்கிறார்கள். ஷகிலா தொடங்கி இளம் நடிகரான அஸ்வின் வரை சமைத்து அசத்துகிறார்கள். அதிலும் திரைத்துறையில் பலரையும் ஆட்டுவித்த புகழ்பெற்ற நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் இந்நிகழ்ச்சியில் செய்யும் ரகளை சமையல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது கூட இதையே தான் வழிமொழிந்தார். இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ரா பங்கேற்காத நிலையில் இந்த வாரத்திற்கான புரோமோக்கள் தற்போது விஜய் டிவியில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் பாபா பாஸ்கர் மாஸ்டர் பங்கேற்கவில்லை போல் தெரிகிறது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகச்சியில் இவர் இல்லையா.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

This contestant is not in cwc this week குக் வித் கோமாளியில் இவர் இல்லையா

People looking for online information on Baba Baskar will find this news story useful.