இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் இந்திய படங்கள்.. எது? & எப்ப?.. FULL LIST ரெடி!.. WEEK END- அ மஜா பன்னுங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தில் இணைந்த பிரபல 'அசுரன்' பட நடிகர்.. வேறமாரி BTS புகைப்படம்

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், இந்த ஏப்ரல் கடைசி வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மன்மதலீலை

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு மன்மத லீலை படத்தை இயக்கினார். மாநாடு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ளார். இதன் காரணமாகவே இந்த படத்தின் துணை டைட்டிலில் வெங்கட்பிரபு Quickie என போடப்பட்டுள்ளது. இந்த படம் வெங்கட்பிரபுவின் 10வது படமாகும்.

'மன்மத லீலை' திரைப்படத்தில் அசோக் செல்வனுடன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். இதுவரை வெங்கட் பிரபு படத்திற்கு, பிரவீன் கே.எல் தான் எடிட்டிங் பணிகளை மேற்கொள்வார். ஆனால், இந்த 'மன்மத லீலை' திரைப்படத்தில் வெங்கட் ராஜன் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான இந்த படம் தற்போது, ஆஹா தமிழ் ஒடிடியில் இன்று (22..04.2022) வெளியாகி உள்ளது.

கனா காணும் காலங்கள்

புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் திரு.சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர். லாக்டவுன் காரணமாக 2.5 வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளியை மீண்டும் திறக்க உற்சாகமாக இருக்கிறார். கதை மனதைக் கவரும் நட்புகள், டீனேஜ் காதல்கள் மற்றும் பழைய பள்ளி மாணவர்களுக்கும் புதிதாக சேரும் கூட்டத்திற்கும் இடையே உருவாகும் போட்டிகளைச் சுற்றி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை மூடுவதற்கான அரசாங்க அறிவிப்பைப் பெறும்போது சக்திவேல் மிகப்பெரிய சவாலை எதிர் கொள்கிறார். பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பள்ளியை மூடுவதில் இருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த  வெப் சீரீஸீன் கதை.

தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடிக்க, நடிகர் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடிக்கிறார். ராஜ்மோகன் PT மாஸ்டராக நடிக்கிறார். 

அனந்தம்

ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” இணைய தொடர், 2022  ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

தமிழ் திரையுலகின் மதிப்புமிகு இயக்குநரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  பிரியா V இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட இனிமையான தொடர் “அனந்தம்”. இது 1964 - 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த , உணர்ச்சிகரமான தருணங்களை, பொழுதுபோக்குடன் தரும் ஒரு அழகான இணைய தொடராகும். ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்து பார்வையிடுவதில் இதன் கதை தொடங்குகிறது, அவர் 'அனந்தம்' என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார், அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின்,  ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம் தான் கதை.

இந்த தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் V. முரளி ராமன் தயாரிக்க, அனந்தம் தொடரில் இயக்குனர் ப்ரியா V பல பணிகளை செய்துள்ளார். திரைக்கதை, எழுத்து மற்றும் வசனங்களுடன், எட்டு எபிசோடுகள் முழுவதும் ஒரு தடையற்ற கதையைச் சொல்லி அசத்தியுள்ளார் இயக்குனர் ப்ரியா V.

திரைக்கதை - ப்ரியா V, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் & ரீமா ரவிச்சந்தர் | எழுத்தாளர் - பிரியா V | வசனங்கள் - ப்ரியா V & ராகவ் மிர்தாத் | ஒளிப்பதிவு - பகத் | தயாரிப்பு வடிவமைப்பாளர் - சூர்யா ராஜீவன் | இசை - A.S. ராம் | எடிட்டர் - சதீஷ் சூர்யா

இந்த தமிழ் படங்கள், வெப் சீரிஸ்களுடன், கானி (தெலுங்கு) படம் ஆஹா ஒடிடியிலும், அந்தாக்ஷரி மலையாளப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது. ரமண சவேரி எனும் கன்னட படமும் Voot தளத்தில் வெளியாகிறது. KIng Richard ஆங்கிலப்படம் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் இந்திய படங்கள்.. எது? & எப்ப?.. FULL LIST ரெடி!.. WEEK END- அ மஜா பன்னுங்க! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

This April last week OTT Release Movies Web Series List

People looking for online information on April last week OTT Release Movies, OTT Release Movie, Web Series will find this news story useful.