விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், லியோ & லால் சலாம் படங்களின் தமிழ் அல்லாத தலைப்புகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "மோகன் ஜி யாருனே தெரியாது".. வி சி க தலைவர் தொல். திருமாவளவன் பரபரப்பான பதில்!
LEO
வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர்
இந்த படத்தில் நடிக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
லியோ படப்பிடிப்பு
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
லியோ படக்குழுவினர்
லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.
படப்பிடிப்பை நிறைவு செய்தோர்
லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பி இருந்தனர்.
லியோ பட உரிமை
லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
லியோ தலைப்பு குறித்து சீமான்
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், லியோ & லால் சலாம் படங்களின் தமிழ் அல்லாத தலைப்புகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். "ஏற்கனவே தமிழ் பாதுகாப்பு இயக்கம் மூலம் இதை பேரியக்கமாக மக்கள் இயக்கமாக முன்னெடுத்தோம். திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். வீதிகளுக்கு தமிழில் பெயர் இருக்க வேண்டும். வணிக வளாகங்கள் மற்றும் கடைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று இயக்கமாக செயல்பட்டோம். தற்போது அது பெருகி வருகிறது. தமிழில் தயாரிக்கும் போது படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்பது இன்றியமையாதது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கருதுகிறது. சில படங்கள் தமிழ் உட்பட பல தென்னிந்திய மொழிகளில் மற்றும் இந்தி மொழியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் பான் இந்திய படங்களை விதி விலக்காக நாம் கருதலாம். தமிழில் தமிழர்கள் மட்டும் பார்க்கும் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டுவது தேவையற்றது" என தொல். திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
Also Read | "பகாசூரன் படத்தை பாத்துட்டீங்களா?".. ஒரே வார்த்தையில் சட்டென்று பதில் அளித்த திருமாவளவன்!