அனிருத் இசையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அடுத்த சிங்கிள்.. ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' தெலுங்கு ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல முன்னணி தயாரிப்பாளர்!

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழுவினர் நடத்தினர்.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. 'மேகம் கருக்காதா' எனும் தொடக்க வரிகளில் பாடல் அமைந்துள்ளது. மேலும் தனுஷ் உடன் தனித்தனியாக நித்யா மேனன் & ராஷி கண்ணா ஆகியோர் நடனமாடி பாடல் முன்னோட்ட வீடியோவில் தோன்றியுள்ளனர். இந்த  சிங்கிள் பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி  நடனம் அமைத்துள்ளார். ஜூலை மாதம் 15 ஆம் நாளன்று இந்த பாடலை படக்குழு வெளியிட உள்ளது.

இப்படத்திற்கு ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

திருச்சிற்றம்பலம் படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கடைசியாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படம், கடந்த 2021 ஏப்ரலில் ரிலீசானது. அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஒடிடியில் வெளியாகின.

இந்த திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து 'நானே வருவேன்' படத்திலும், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் வாத்தி, (தெலுங்கில் Sir) எனப் பெயரிடப்பட்ட படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

 

Also Read | சந்தானம் நடிப்பில் ரிலீசாகும் புதிய படம்.. தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

 

தொடர்புடைய இணைப்புகள்

Thiruchitrambalam Movie Second Single Song Release Update

People looking for online information on Anirudh, Dhanush, Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Second Single Song Release will find this news story useful.