திருச்சிற்றம்பலம் ஸ்பெஷல்.. அனிருத்தை கட்டிப்பிடித்து வாழ்த்திய தனுஷ்! இணையத்தை கலக்கும் PHOTO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

Advertising
>
Advertising

Also Read | பா.ரஞ்சித்-தின் 'நட்சத்திரம் நகர்கிறது'.. டிரெய்லர் எப்போ? போஸ்டருடன் வெளியான அப்டேட்..!

இப்படம் இன்று ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இன்று காலை 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்நிலையில் தனுஷின் படத்தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனத்தின் சி இ ஒ ஸ்ரேயாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் அனிருத் ரவிச்சந்திரனை கட்டிப்பிடித்து வாழ்த்திய புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். "இந்த புகைப்படத்துக்கு தலைப்பே தேவையில்லை" என‌ தலைப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடிக்கிறார்கள்.

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

Also Read | ஸ்பெயின் வீதிகளில் போட்டோஷூட் நடத்திய நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. ரொமாண்டிக் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Thiruchitrambalam Dhanush with Anirudh Ravichandar Viral Photo

People looking for online information on Anirudh, Dhanush, Thiruchitrambalam will find this news story useful.