கார்த்தியின் சர்தார் பட பாடலை பாடி திருமூர்த்தி நெகிழ்ச்சி.! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இணையத்தில் பாடல் பாடி கவனம் ஈர்த்த பாடகர் திருமூர்த்தியின் புதிய பாடல் வீடியோ ஒன்று, தற்போது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Advertising
>
Advertising

பிரபல இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருந்த "கண்ணான கண்ணே" பாடலை தனியாக பாடி வீடியோ ஒன்றை திருமூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்திருந்தார்.

வேற லெவலில் திருமூர்த்தி குரலின் புகழ், இணையத்தில் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, திருமூர்த்திக்கு திரைப்படத்தில் பாடவும் வாய்ப்பு கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் இமான்.

இதன் பின்னர், ஒரு சில படங்களில் பாடல்கள் பாடியுள்ள திருமூர்த்தியின் இனிமையான குரலுக்கென்றே பிரத்யேக ரசிகர் கூட்டமும் உள்ளது. அது மட்டுமில்லாமல், தொடர்ந்து வைரல் ஹிட்டடிக்கும் பாடல்களை கூட தனது பாணியில் மிகவும் அசத்தலாக பாடி அதனை வீடியோவாகவும் வெளியிடுவதை திருமூர்த்தி வழக்கமாக கொண்டு வருகிறார்.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த விக்ரம் திரைப்படத்தில் வரும் 'பத்தல பத்தல' பாடலை திருமூர்த்தி பாட, கமல் கூட அவரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். அது மட்டுமில்லாமல், இசை பள்ளியில் திருமூர்த்தி பயிற்சி பெறுவதற்கான செலவையும் ஏற்றுக் கொள்வதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் திருமூர்த்தி பாடி உள்ள பாடல் வீடியோ ஒன்று, அதிக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கார்த்தி நடித்து பிஎஸ் மித்ரன் இயக்கி இருந்த 'சர்தார்' திரைப்படம், தீபாவளி விருந்தாக, 21.10.2022 அன்று திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

முன்னதாக, சர்தார் படத்தில் வரும் "ஏறு மயிலேறி" என்ற ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி இருந்த பாடல், வெளியானது முதல் ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தது. இந்த பாடலை ஒரு குடம் மற்றும் சிறிய குச்சியுடன் தாளம் போட்டு தனது இனிமையான குரலில் மிகவும் அசத்தலாக பாடி உள்ளார் திருமூர்த்தி.

இந்த வீடியோவையும் அவர் பகிர்ந்திருந்த நிலையில், திருமூர்த்தியின் வழக்கமான பாடலை போல இந்த பாடலும் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.

கார்த்தியின் சர்தார் பட பாடலை பாடி திருமூர்த்தி நெகிழ்ச்சி.! வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thiru moorthi sing yaeru mayileri song from sardar movie

People looking for online information on Karthi, Sardar, Thirumoorthi, Yaerumayileri will find this news story useful.