பிரபல இயக்குனர் Ron Howard இயக்கத்தில் சமீபத்தில் சில திரை அரங்கில் மட்டும் வெளியாகி, பின்னர் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான திரைப்படம், "Thirteen Lives".
Also Read | இவங்க தான் பூஜா ஹெக்டே தங்கச்சியா? அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட சூப்பர் டூர் போட்டோஸ்!
கடந்த 2018 ஆம் ஆண்டு, தாய்லாந்து பகுதியில் சிறுவர் கால்பந்து அணி வீரர்கள் சிலர், ஒரு குகையில் சிக்கிக் கொள்வது தொடர்பான நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, Thirteen Lives திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று வாரங்கள், அந்த குகைக்குள் சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் சிக்கிக் கொள்ளும் நிலையில், அவர்களை காப்பாற்ற நடக்கும் போராட்டம் தான் இந்த திரைப்படத்தின் கதைக் களம்.
தாய்லாந்து மக்களின் கலாச்சாரத்துடன் அங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாக மிகவும் தத்ரூபமாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், thirteen lives திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், உள்ளிட்ட பலரையும் தாய்லாந்து பகுதியில் இருந்து தேர்வு செய்திருந்தார் இயக்குனர் Ron Howard. இதற்கு காரணம், திரைப்படம் தாய்லாந்து தொடர்புடன் விளங்க வேண்டும் என்பதால் தான்.
அந்த வகையில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை Pattrakorn Tungsupakul, குகைக்குள் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் தாயாக நடித்திருந்தார். படத்தில் நடித்தது தொடர்பாக தனது அனுபவத்தை பகிர்ந்த நடிகை Tungsupakul, "இயக்குனர் Ron Howard என்னை அதிகம் நம்பி இருந்தார். இதனால், நான் என்னை நிறைய தயார்படுத்திக் கொண்டு, கடினமாக உழைக்கவும் செய்தேன். மேலும் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சினிமா உருவாகி இருந்ததால், நிறைய ஆராய்ச்சி மேற்கொண்டு நான் தயாராகினேன்" என கூறினார்.
மேலும், மறைந்த தந்தை பற்றி பேசி எமோஷனல் ஆன நடிகை Tungsupakul, "எனது மறைந்த தந்தை, தற்போது இருக்கும் இடத்தில், பிரைம் வீடியோ கிடைத்து தன்னுடைய மகள் நடித்த Thirteen lives திரைப்படத்தை அவர் பார்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசை" என்றும் மனம் உருகி உள்ளார்.
Tungsupakul பற்றி பேசும் இயக்குனர் Ron Howard, "இந்த படத்தில் மிகவும் தொடர்பு படுத்தி பார்க்கக்கூடிய ஒரு நபர் அவர்தான். மனதை கவரும் வகையிலும் அவரது நடிப்பு அமைந்திருந்தது" என்று கூறினார். Thirteen lives திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமும் அவர் தான் என்றும் Ron புகழ்ந்துள்ளார். சம்பவம் நடந்ததாக கூறப்படும் தாய்லாந்தில் உள்ள Tham Luang குகை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் தான் Tungsupakul என்பதால், அவரை இயக்குனர் Ron Howard தேர்வு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read | கணவர் மறைவில் இருந்து மீண்டும் வரும் மீனா.. முதல் முறையாக Insta-வில் பகிர்ந்த புகைப்படங்கள்