"TIKTOK-ல சில பொம்பளைங்க பேச்சு.. சகிக்க முடியல.. ஜெயில்ல போடணும்!.".. பட விழாவில் கொதித்த பேரரசு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிக் டாக்கில் ஆபாச பேச்சு மற்றும் அநாகரிகமான வீடியோக்களை பதிவிடும் பெண்களைக் கைது செய்ய வேண்டும் என்று படவிழா ஒன்றில் இயக்குநர் பேரரசு பேசியுள்ள பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

'பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே'

இந்தப் படத்தின் தலைப்பு பேனாவை குறிக்கிறது என்பதை இரண்டு சுழி பென்னில் இருக்கும் ன-வை பார்த்த பின்புதான் உணர்ந்தேன். எனினும் பேனாவுக்கு தான் விலை. எழுத்துக்கு விலை இல்லை. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பற்றிப் பேசுகிறது. அதற்கு எதிராகப் பேசுகிறது என்று சொன்னார்கள் . சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. டிக் டாக் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை.

சகிக்க முடியவில்லை.. ஜெயிலில் போட வேண்டும்.!

சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை. பார்க்க சகிக்க முடியவில்லை. அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அந்த அளவிற்கு  அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன. இவர்களை விட்டு வைக்கக் கூடாது. யார் யாரையோ உள்ளே தூக்கி போடுகிறார்கள். இவர்களை ஜெயிலில் போட வேண்டும்.

Also Read: “உனக்கு கடன் பிரச்சனை இருக்குல்ல?.. பணத்த எடுத்துக்கோயேன்?”.. நிரூப் கேட்ட கேள்வி.. தாமரையின் அனல் தெறிக்கும் பதில்!

செல்போனில் ஃபுல் டாக்டைம் ஒழித்துக்கட்டனும்

நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்குக் காரணம் செல்போன்கள் தான். தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு கவனமாக வேண்டும். நம் சுதந்திரம் இப்படி மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அளவற்ற சுதந்திரம் தான் நாட்டைக் கெடுக்கிறது. செல்போனில் ஃபுல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும். அளவில்லாமல் பேசும் வாய்ப்பு தான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.

ஆசிரியர்கள், மதகுருமார்களிலும் சிலர் உள்ளனர்

நாடு இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண்களைத் தவறாக பயன்படுத்துவது என்று பல இடங்களிலும் நடக்கிறது. நம்பிக்கையோடு அனுப்பி வைக்கப்படும் இடத்தில் சில ஆசிரியர்கள், நம்பிக்கையோடு வணங்கச் செல்லும் இடத்தில் சில மதகுருமார்கள் என்று எத்தனை மோசமான வடிவங்களில்  இருக்கிறார்கள். பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். தண்டனைக்கு பயம் வரவேண்டும்.

வாத்தியாராக இருந்தாலும் சரி, மதகுருமார்களாக - சாமியார்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சரியான தண்டனை கொடுக்க வேண்டும். மதம் ஒரு புனிதமான விஷயம். நம் மதத்தில் குருவுக்கு ஒரு அங்கீகாரமான இடத்தை அளித்திருக்கிறோம். அசாமியாரையும் பாதிரியாரையும் தெய்வமாகவே பார்க்கிறோம். அங்கும் சிலரால் தவறுகள் நடக்கிறது. எல்லா மதத்திலும் இப்படி நடக்கிறது. நாம் நம்பிக்கை வைக்கும் ஆசிரியர்கள் இப்படி நடந்து கொள்வது பெரிய நம்பிக்கை துரோகமாகும். அப்படித் துரோகம் செய்பவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும்.” என்று பேசினார்.

விழிப்புணர்வு படம எடுக்க வேண்டியிருந்தா எங்க பொழுதுபோக்கு படம் எடுப்பது?

மேலும் பேசியவர், “சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம் அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டோருக்காக போராட வேண்டும், பொள்ளாச்சி என்ன ஆச்சு? இவையெல்லாம் பற்றிய விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று படம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அதிகமாக இருக்கிறது. காரணம் சமூகம் சீரழிந்துகொண்டிருப்பதுதான்.

Also Read: "தெருத் தெருவா பேப்பர் போட்டேன்!".. நம்ம சரத்குமார் life-ல இவ்ளோ இருக்கா? உருகிய BiggBoss ஹவுஸ்மேட்ஸ்!

அரசாங்கத்துக்கு கோரிக்கை

இதனால் பொழுது போக்கு தளத்தை விட்டு சினிமா விலகிவிடும். அப்புறம் மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. சினிமா சரியாக இருக்கிறது என்றால் பொழுதுபோக்கு படங்கள் வந்தால் தான் சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம். அந்த சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். எங்கே இருந்து பொழுதுபோக்கு படங்களை எடுப்பது?

எனவே அரசாங்கம் இதுபோன்ற தவறுகளுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். (வலியுறுத்தல், எச்சரிக்கை என்ன வேணா போட்டுக்கங்க என சொல்லி சிரிக்கிறார்). இந்தப் படம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கமர்ஷியலாக உருவாகி உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று இயக்குநர் பேரரசு பேசினார்.

Also Read: “வட்டி வசூலிக்குறாங்க.. சில ஓடிடி நிறுவனங்கள்”.. இயக்குநர் சீனு ராமசாமி சொன்ன பரபரப்பு கருத்து! அவரே பதிவிட்ட ட்வீட்!

"TIKTOK-ல சில பொம்பளைங்க பேச்சு.. சகிக்க முடியல.. ஜெயில்ல போடணும்!.".. பட விழாவில் கொதித்த பேரரசு! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

These tiktok women should be arrested Perarasu Speech Video

People looking for online information on Pen vilai 999 mattume, Perarasu, Tiktok girls, Tiktok Video, Tiktok women will find this news story useful.