அடடே.. கமலின் 'விக்ரம்' படத்தில் இந்த மாஸ்டர் பட 'பிரபலங்கள்!'.. புழுதி பறக்கும் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜின் சமீபத்திய வெற்றிப்படம் மாஸ்டர்.

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஒருவருக்கொருவர் செம்ம மாஸ் வேடங்களில் நேரடியாக மோதிக்கொள்ளும் , இந்த படத்தை எடுத்ததன் மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உண்மையில் ஒரு நட்சத்திர இயக்குநராக வென்றுள்ளார். 

மாஸ்டர் திரைப்படம் முதலில் தியேட்டரிலும் பின்னர் அமேசான் ப்ரைம் OTT-யிலும் வெளியீடு செய்யப்பட்டதன் மூலமாகவும் மேலும் பல இதயங்களை படக்குழு வென்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை பற்றிய ஆர்வம் அனைவரிடத்திலும் உருவானது. அப்போதுதான் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இணையவிருக்கும் விக்ரம் திரைப்படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி  அனைவரிடத்திலும் குஷியையும் பலத்த எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் கருப்பொருளை பொருத்தவரை ஒரு கேங்க்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டு அதிரடியாக உருவான திரைக்கதை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனராஜ் இப்போது விக்ரம் பட தொடர்பான ஒரு புழுதி பறக்கும் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

ஆம், இதை புழுதி பறக்கும் அப்டேட் எனறுதான் சொல்ல முடியும். காரணம், மாஸ்டர் திரைப்படத்தில் பணிபுரிந்த அதே ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பு மற்றும் அறிவு என்கிற அன்பறிவ் (இரட்டையர்கள்) இப்போது இந்த படத்தில் இணைந்துள்ளதாக அவர்களுடன் நடிகர் கமல்ஹாசனுடனும் புகைப்படம் எடுத்து  ட்வீட் பதிவிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனராஜ்.

ALSO READ: பிரபல டிவி சேனல் சீரியலில் அதிரடி மாற்றம்!.. இனி நாயகியாக நடிக்கப்போவது இவர் தான்!

தொடர்புடைய இணைப்புகள்

These master technicians joins lokesh kanagaraj Kamal vikram

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.