பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகர் ஆரவ். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்திருந்த மார்கெட் ராஜா எம்பிபிஎஸ் கடந்த வருடம் வெளியாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள ராஜபீமா படம் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் அவருக்கும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோஷ்வா இமை போல் காக்க பட ஹீரோயின் ராஹேவிற்கும் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது.
அதன் படி நேற்று (06/09/2020) இருவருக்கும் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் அவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரீஷ் கல்யாண், பிந்து மாதவி, காயத்ரி ரகுராம், சுஜா வருணி, நடிகர் சக்தி, சினேகன், கணேஷ் வெங்கட்ராமன், ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரபலங்களை வாழ்த்தினர்.
மேலும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் சரண், வையாபுரி, 'சிலம்பாட்டம்' இயக்குநர் சரவணன், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர் விஜய், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, கேமரா மேன் சக்திவேல் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதனையடுத்து மணமக்களுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.