தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமானார். அந்த படத்தில் நடிகர் விஜய்யின் மகள் ஷாஷாவும் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு சில விருதுகளைப் பெற்ற நைனிகா, அதன் பிறகு படங்களில் காணப்படவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் மகள்கள் தினத்தன்று நடிகை மீனா நைனிகாவுடன் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தில் மிகவும் வளர்ந்து அழகாக இருக்கும் நைனிகா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.