விஜய் ரசிகர்கள் இந்த விஷயத்துல எப்பவுமே கெத்துதான்.. தீபாவளிக்கு அசத்தலாக செய்த உதவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் ரசிகர்கள் செய்துள்ள நலத்திட்ட உதவி பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. சினிமா மட்டுமின்றி, நடிகர் விஜய் சமூக நலத்திட்டங்களை அவரது மக்கள் இயக்கம் மூலமாக செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தீபாவளிக்கு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், தீபாவளுக்கு அங்கு புத்தாடை வாங்க முடியாமல் தவித்த செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு ஆடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கியுள்ளனர். 

மேலும் அங்கு உள்ள யாசகர்களுக்கும் அவர்கள் புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி உதவி செய்துள்ளனர். இதை தொடர்ந்து இணையத்தில் வெளியான போட்டோ வைரல் ஆகி வருவதுடன், இந்த நலத்திட்ட உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவி | theni vijay fans helps people giving dress and sweets for diwali

People looking for online information on Theni Vijay Fans, Vijay, Vijay Makkal Iyakkam will find this news story useful.