தென்றல் சீரியல் ஸ்ருதி திரும்ப வந்துட்டாங்க... புதிய சீரியல்... ஹீரோ யாரு பாருங்க..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல், திருமதி செல்வம், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பான அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்ருதி. மீண்டும் சன் டிவியில் அபூர்வராகங்கள், அழகு போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். அதிலும் அவர் நடித்து வந்த அழகு சீரியல் சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தனது அடுத்த சீரியல் மூலம் பிரம்மாண்டமாக என்ட்ரி கொடுக்க உள்ளார் நடிகை ஸ்ருதி.

தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாது தொலைகாட்சிக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது உட்பட மற்றும் பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோயினாக நடிகை ஸ்ருதி நடிக்கும் சீரியலின் புரோமோவை சன் டிவி தற்பொழுது வெளியிட்டுள்ளது.

'தாலாட்டு' என்று இந்த சீரியலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக இந்தப் புரோமோவை பார்க்கும்போது சுருதிக்கு இந்த சீரியலில் சக்தி வாய்ந்த கதாபாத்திரம் இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகிறது. தெய்வமகள் சீரியலில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணா இதிலும்  ஹீரோவாக நடிக்கிறார். கதையின் கரு இதுதான் கிருஷ்ணாவுக்கு சிறுவயதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தாயின் அன்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது வளர்ந்து திருமணம் ஆகியிருக்கும் அவருக்கு தாய் பாசம் கிடைக்குமா என்பது போல இந்த சீரியலின் கதை இயங்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thendral fame shruthi raj re entryதென்றல் சீரியல் ஸ்ருதி திரும்ப வந்துட்டாங்க

People looking for online information on Shruthi raj will find this news story useful.