"போலீஸ் படம் பாக்குறதே ஒரு தெம்பு".. பிரம்மாண்டமாக நடந்த தீர்க்கதரிசி இசை வெளியீட்டு விழா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம், 'தீர்க்கதரிசி'. கமர்ஷியல் க்ரைம் த்ரில்லர் வகையில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரித்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | புது வீட்டில் தனுஷ்.. தனது ரசிகர்களை குடும்பத்துடன் வரவழைத்து சந்திப்பு! நெகிழ்ச்சியான PHOTOS

தீர்க்கதரிசி படத்தை PG மோகன் - LR சுந்தரபாண்டி ஆகியோர் இயக்கி உள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாக உள்ள சூழலில் இதன் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா, சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. மேலும் இந்த நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொள்ளவும் செய்திருந்தனர்.

மேலும் இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டு தீர்க்கதரிசி படக்குழுவினரை வாழ்த்தவும் செய்திருந்தனர். தொடர்ந்து படக்குழுவினரும் தீர்க்கதரிசி படம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசியிருந்த இயக்குனர் ஆர் கே செல்வமணி, "தீர்க்கதரிசி படத்தின் இயக்குனர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுனர்கள். இந்த படத்தின் காட்சிகளை பார்க்கும் போது அவை மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. இந்த படம் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்" எனக்கூறி இருந்தார்.

நடிகர் நாசர் பேசு பேசியபோது, "இந்த படத்தில் நான் நடிக்கவில்லை, ஆனால் என்னுடைய நண்பர்கள் ஏராளமானோர் இந்த படத்தில் பணியாற்றி உள்ளார்கள். டீசர் பார்க்க நன்றாக உள்ளது" என கூறினார்.

Images are subject to © copyright to their respective owners.

தீர்க்கதரிசி படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசி இருந்த இயக்குனர் ஹரி, "படத்தின் டீசர் மற்றும் பாடல் என அனைத்தும் சிறப்பாக உள்ளது. போலீஸ் திரைப்படம் பார்ப்பது என்பதே ஒரு கர்வம் தான். அஜ்மல் காவல்துறைக்கே உண்டான மிடுக்குடன் உள்ளார். கதவுகள் மூடப்படாத காவல்துறையை கருவாக வைத்து இந்த படத்தை எடுத்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என்றார்.

நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையா பேசுகையில், "காவல்துறை காதாபாத்திரங்கள் என்னுடைய வாழ்விலும் திருப்புமுனையாக இருந்துள்ளது. இந்த திரைப்படமும் காவல்துறையை பற்றிய கதையாக உள்ள சூழலில், இயக்குனர்கள் நிறைய அனுபவங்களுடன் களமிறங்கி இருக்கிறார்கள்" என தெரிவித்து வாழ்த்துக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இயக்குனர் பேரரசு பேசுகையில், "இந்த படத்தை மிகச் சிறந்த இயக்குனர்களிடம் இருந்து வந்தவர்கள் உருவாக்கி உள்ளார். இது ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்கும் என்பது பார்க்கும்போதே தெரிகிறது. சத்யராஜ் சாருடைய நடிப்பு தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல், இந்த படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்" என குறிப்பிட்டார்.

Images are subject to © copyright to their respective owners.

தீர்க்கதரிசி படத்தில் நடித்த ஜெய்வந்த் பேசுகையில், "தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்னுடைய கல்லூரி சீனியர். அவர் என்னுடைய திறமைகளை பார்த்து வாய்ப்பை வழங்கியுள்ளார். இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் சிக்கல் வந்த போதும் அதற்கு சதீஷ் சார் தான் உதவ முன்வந்தார். இந்த படத்தின் மூலம் எனக்கு அற்புதமான இயக்குனர்களை அறிமுகப்படுத்தி, அற்புதமான கதையை எனக்கு கொடுத்து அதில் நான் சரியாக பொருந்தி போவேன் என்றும் கூறினார். இந்த படம் ஒரு மாஸ் என்டர்டெயினராக அனைவரையும் ரசிக்க வைக்கும்" என்றார்.

அதேபோல மற்றொரு நடிகர் துஷ்யந்த், "இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. என்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்களுக்கு இந்த இடத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்" என குறிப்பிட்டார்.

தீர்க்கதரிசி படத்தின் இயக்குனர்களில் ஒருவரான PG மோகன் பேசுகையில், "இது எனது முதல் படம். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளோம். அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவை நீங்கள் தருவீர்கள் என நம்புகிறேன்" என நெகழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இந்த படத்தின் மற்றொரு இயக்குனரான LR சுந்தரபாண்டி, "பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக வந்துள்ளேன். இந்த படத்தை குறைந்த நாட்களில் நாங்கள் முடிக்க காரணம் ஹரி சாருடன் பயணித்த போது கிடைத்த அனுபவம் தான். அவர் வேகமாக வேலை பார்த்தாலும் சிறப்பாக வேலையை முடிப்பார். இந்த படம் பல்வேறு திருப்பங்களுடன் உங்களை மகிழ்விக்கும்" என கூறினார்.

தீர்க்கதரிசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அஜ்மல், "சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் கதையை கூறும்போது இதில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. மேலும் இதில் 15 முக்கியமான விஷயங்கள் உள்ளது. அவை அனைத்தும் உங்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். உங்கள் ஆதரவை தர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

பிரபல நடிகர் சத்யராஜ் பேசுகையில், "இதுபோன்று சிறிய படங்கள் செய்ய தயாரிப்பாளருக்கு அனுபவம் வேண்டும். தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குனர்கள் வரிசையில் இவர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். கன்டென்ட் சிறப்பாக இருந்தால் வெற்றி பெற்று விடலாம். இந்த படத்திலும் அது உள்ளது" என கூறினார்.

Also Read | "நாடக காதலே இல்லன்னு சொல்லி".. Pa.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' குறித்து மோகன்.G

"போலீஸ் படம் பாக்குறதே ஒரு தெம்பு".. பிரம்மாண்டமாக நடந்த தீர்க்கதரிசி இசை வெளியீட்டு விழா!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Theerkadharishi Teaser and Audio Launch Event sathyaraj ajmal

People looking for online information on Ajmal, Sathyaraj, Theerkadharishi, Theerkadharishi Teaser and Audio Launch Event will find this news story useful.