KGF CHAPTER 2 க்கு ஏன் டிக்கெட் கிடைக்க மாட்டேங்குது..? தியேட்டர் ஓனர் சொன்ன சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | அடடே..! நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த குழந்தைக்கு சூட்டியுள்ள பெயர் இதுதான்!

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த 10,000 திரையரங்குகளில் கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.

தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசாகி உள்ளது. இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்துள்ளது. இந்நிலையில் KGF 2 படத்தின் டிக்கெட்டுக்கு பயங்கரமான தேவை நிலவுகிறது. இது குறித்து நமது BEHINDWOODS சேனலுக்கு திருப்பூர் சிவசக்தி சினிமாஸ் உரிமையாளர் சுப்ரமணியன் அளித்த பேட்டியில் சில தகவல்களை கூறியுள்ளார்.

அதில், KGF 2 படம் ரிலீசான திரையரங்குகள் சிறிய திரையரங்குகள் என்றும், குறைவான எண்ணிக்கையில் கொங்குப் பகுதிகளில் ரிலீஸ் ஆனது என்றும், அதனால் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதனால் தான் கே.ஜி.எஃப்-2 இடைவிடாமல் தொடர்ச்சியாக 4 நாட்களும் பல திரையரங்குகளில் படம் ஓடியது என்றும் கூறியுள்ளார்.

Also Read | BEAST அரபிக்குத்து பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடிய P V சிந்து! பூஜாக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..

KGF CHAPTER 2 க்கு ஏன் டிக்கெட் கிடைக்க மாட்டேங்குது..? தியேட்டர் ஓனர் சொன்ன சூப்பர் தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Theatre Owners Explained Ticket Demand for KGF CHAPTER 2 movie

People looking for online information on KGF Chapter 2 Movie, KGF2, Prashanth Neel, Theatre owners, Ticket Demand, Yash will find this news story useful.