ரஜினி, அஜித் விஜய், உள்ளிட்ட ஹீரோக்களின் நடிகர்களின் படங்களுக்கு புதிய நடைமுறைகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளரகள் சங்கத்தின் முக்கிய கூட்டம் 24.04.2019 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பராமரிப்பு செலவுகள் உயர்வு, சொத்து வரி உயர்வு, வேலையாட்கள் ஊதிய உயர்வு போன்றவற்ற மனதில் கொண்டு இதனை எதிர்கொள்ளும் விதமாக புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன் படி ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு முதல் வாரம் மொத்த வசூலில் A சென்டர்களில்  60 சதவீதமும் மற்ற சென்டர்களில் 65 சதவீதமும் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும்.

மேலும் சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களுக்கு A சென்டர்களில் 55 சதவீதம் மற்ற சென்டர்களில் 60 சதவீதமும் மொத்த வசூலில் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மற்ற நடிகர்களுக்கு முதல் வாரம் A சென்டர்களில் 50 சதவீதமும் மற்ற சென்டர்களில் 50 சதவீதமும் மொத்த வசூலில் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Theatre Owners Association did few changes for Actors including Rajini, Ajith, Vijay movies

People looking for online information on Ajith Kumar, Rajinikanth, Theatre owners, Vijay will find this news story useful.