DSP இசையில் அந்தோனி தாசன் குரலில் செம்ம PEPPY விசில் பாட்டு … ’தி வாரியர்’ SECOND SINGLE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தி வாரியர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

The warrior movie second single song released
Advertising
>
Advertising

தி வாரியர்…


இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில், தமிழ் தெலுங்கு என இருமொழியில் உருவாகும் திரைப்படம் ‘தி வாரியர்’. ராம் பொத்தினேனி ஏற்கனவே ‘Ready’ மற்றும்  iSmart Shankar போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களில் நடித்து முன்னணி மாஸ் நடசத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வில்லனாக தமிழ் & தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் ஆதி நடிக்கிறார். தவிர, அக்ஷரா கௌடா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்துக்கு, பல ப்ளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

புல்லட் பாடல்

இதனால் இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் உள்ளது., எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு இசை உரிமையை, Aditya Music நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான புல்லட் பாடல் சிம்பு குரலில் வெளியானது. இந்த பாடல் இணையவாசிகள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கினர்.


விசில் பாடல்…

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சிங்கிள் பாடலான ‘விசில் பாடல்’ வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் சூர்யா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில்  விவேகா இசையில் அந்தோனி தாசன் மற்றும் ஸ்ரீனிஷா ஜெயசீலன் ஆகியோரின் peppy ஆன குரலில் உருவாகியுள்ளது. புல்லட் பாட்டு போலவே இந்த பாடலும் ரசிகர்களை பெரிய அளவில் கவரும் விதமாக catchy ஆக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

The warrior movie second single song released

People looking for online information on Lingusamy, Ram Pothineni, The Warrior will find this news story useful.