விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே நடித்த லைகர் படத்தின் சென்சார் போர்டு ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இத்தாலியில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்.. தோழிகளுடன் சேர்ந்து வெளியிட்ட PHOTOS!

விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed) படத்தின் வெளியீட்டை தொடர்ந்து படம் சென்சாராகி உள்ளது.

இந்த படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும்  படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் பாதி 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் என்றும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தில் 7 சண்டை காட்சிகளும் 6 பாடல் காட்சிகளும் உள்ளன என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல உலக குத்துசண்டை வீரர்  மைக் டைசன் இந்தியத் திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் இந்த, அதிரடி ஆக்சன்  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

லைகர் திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர்  ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | அட.. தீபிகா படுகோனே தங்கச்சியா இவங்க..? வைரல் ஆகும் ஃபோட்டோஸ்.!

தொடர்புடைய இணைப்புகள்

The Vijay Deverakonda And Puri Jagannadh LIGER Saala Crossbreed Gets UA Certificate

People looking for online information on Liger, Puri Jagannadh, Vijay Deverakonda will find this news story useful.