நடிகர் DWAYNE JOHNSON .. தாய்ப்பாசத்துல கலங்க வெச்ச THE ROCK.. CHRISTMAS-ல் அம்மாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் Dwayne Johnso தமது தாயாருக்கு கிறிஸ்துமஸ் அன்று கார் பரிசாக அளித்த நிகழ்வு டிரெண்டிங்கில் உள்ளது.

Advertising
>
Advertising

நடிகர் Dwayne Johnso

The Rock எனும் பிரபல குத்துச்சண்டை வீரராகவும், அமெரிக்க திரைப்பட நடிகராகவும் புகழ்பெற்றவர் நடிகர் Dwayne Johnso. இவர் நடித்த திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது, ஒரு குத்துச்சண்டை வீரராகவும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உலகெங்கும் உள்ளனர். இவர் முதன்மையான குத்துச் சண்டை வீரராக இருந்து பின்னாளில் நடிகராக மலர்ந்தவர்.

கிறிஸ்துமஸ் பரிசு

இவர்தான் தமது தாயாரை கிறிஸ்துமஸ் நாளன்று ஒரு மாலை வேளையில், இன்ப அதிர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்த நினைத்துள்ளார். இதற்கென தமது மகள்கள் இருவருடன் சென்று, தமது தாயாரை மகிழ்ச்சிப் படுத்திய நடிகர்  Dwayne Johnso அவருக்கு ஒரு சூப்பர் யுட்டிலிட்டி கார் ஒன்றை இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு பரிசாக அளித்துள்ளார்.

Cadillac XT6 SUV ரக கார்

Cadillac XT6 SUV என்கிற சூப்பர் யுட்டிலிட்டி வெஹிக்கல் ரக காரை தான்  Dwayne Johnso தமது தாயாருக்கு பரிசாக அளித்துள்ளார். தாய்ப்பாசத்தில் Dwayne Johnso செய்த இந்த காரியம் பலருக்கும் அவர் மீது மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ராக்கையும் அவரது தாயாரையும் வாழ்த்து வருகின்றனர்.

தாய்ப்பாசம்

நடிகர்  Dwayne Johnso தமது தாயாருக்கு இப்படி ஒரு ஆடம்பரமான காரை பரிசாக அளிப்பது முதல் முறை அல்ல. இது 2வது முறை. ஆம், கடந்த முறையும்  Dwayne Johnso தமது தாயாருக்கு ஒரு ஆடம்பர காரைத்தான் பரிசாக அளித்தார். இன்னும் சொல்லப்போனால், அப்போதும் கூட, Cadillac வகை சூப்பர் யுட்டிலிட்டி வெஹிக்கல் (SUV) ரக காரைத்தான் பரிசாக அளித்திருந்தார்.

USA-வை பொறுத்தவரை, இப்படி ஒரு premium midsize  சூப்பர் யுட்டிலிட்டி வெஹிக்கல் (SUV) ரக காரின் விலை மட்டும் 55 ஆயிரம் டாலர் ஆகும்.

இந்த காரின் இந்திய மதிப்பு

அதாவது இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமானால், இந்த காரின் மதிப்பு, ரூ. 41 லட்சத்து 27 ஆயிரத்து 316 ரூபாய். பார்ப்பதற்கு elegant ஆன லுக் கொடுக்கும் இந்த காரை பலரும் விரும்புகின்றனர். இந்த காரைத்தான் நடிகர் Dwayne Johnso தமது தாயாருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படம் 2 நாளாகியும் டிரெண்டாக உள்ளது.

Also Read: "Door-அ திறங்க BiggBoss.. இவ இருக்கணுமா.. நான் இருக்கணுமானு முடிவு பண்ணுங்க!".. நிரூப் ஆவேசம்!

The Rock Dwayne Johnson surprises his mother with new SUV car

People looking for online information on Actor rock, Christmas, Christmas2021, Dwayne Johnso, Dwayne Johnson, Dwayne Johnson surprises his mother, The Rock will find this news story useful.