நானி, சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் படம் #SSR 'ஷ்யாம் ஷிங்கா ராய்'.
இந்த படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்குகிறார். விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். தேசிய விருதுப்பெற்ற 'ஜெர்சி' பட எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.சூப்பர் நேச்சுரல் திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது.
கொல்கத்தா நகரை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது. இதுவரை இரண்டு போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி ஜூலை 26ல் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்தது.
தற்போது படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நானியின் புதிய லுக்கை படக்குழு ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. வாசு எனும் கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். மேலும் இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.