தெலுங்கு த்ருஷ்யம்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! OTTயா? தியேட்டரா? செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் (Mohan Lal) மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் கூட்டணியில் 2013-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான த்ரிஷ்யம், பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் மிகவும் கவர்ந்தது.

Advertising
>
Advertising

மலையாளத்தில் த்ரில்லர் படங்களை இயக்குவதின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் ஜீத்து ஜோசப். இவர் இயக்கிய த்ரிஷ்யம் திரைப்படம் மலையாள சினிமாவில் மைல்கல் திரைப்படமானது. சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் முதல் பாகம் போலவே இந்திய சினிமாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. குறிப்பாக தெலுங்கில் வெங்கடேஷ், இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் ஆகிறது. 

த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்,மீனா,நதியா,கீர்த்திகா,எஸ்தர் அனில்,சம்பத்ராஜ், நரேஷ், தனிக்கெல்லா பரணி நடித்துள்ளார். இந்நிலையில் திரிஷ்யம் 2 திரைப்படத்தின் தெலுங்கு டீசர் இன்று (12.11.2021) வெளியாகி உள்ளது. ஜீத்து ஜோசப் இயக்க, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆண்டனி பெரும்பாவூரின் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளன. அமேசான் பிரைமில் நேரடியாக வருகிற நவம்பர் 25-ஆம் தேதி இந்த படம் ரிலீசாகிறது.

நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நாரப்பா திரைப்படமும் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

The official Telugu remake Drushyam2 On Prime, Nov 25

People looking for online information on Drushyam-2, Meena, Nadhiya, Venkatesh, Venky will find this news story useful.