LEGEND SARAVANAN : போடு வெடிய.! கலக்கலான புதிய ஃபோட்டோவுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன ‘தி லெஜண்ட்’ சரவணன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக முறையில் தயாரித்த திரைப்படம் தி லெஜண்ட்.. தி லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் ஐந்து வாரங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குளில் ஓடியது.

Advertising
>
Advertising

இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

ஒரு  எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து அனைத்து தரப்பினரும் ரசித்து  பார்க்கும் வகையில்  இப்படம் உருவாகியிருந்தது. இதன் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் பெற்றார். அதன்படி தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தை வெளியிட்டார்கள். எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் இப்படம் 5 மொழிகளில் வெளியானது.

இந்நிலையில் லெஜண்ட் சரவணன், தமது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முன்னதாக விஜயதசமி அன்று தமது சொந்த ஊரில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதையும், பொதுமக்கள் தமது ஊரில் இருக்கும் தமது இல்லத்தில் நிறைதிருந்ததையும் பகிர்ந்திருந்த லெஜண்ட் சரவணன், தற்போது “அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என ஆங்கிலத்தில் தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

The Legend Saravanan Diwali Wishesh new viral pic

People looking for online information on Diwali 2022, Happy Diwali, Legend Saravanan, The legend will find this news story useful.