சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா நடிக்கும் லெஜண்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’மொசலோ மொசலோ’ வெளியாகி கவனத்தைப் பெற்றது.
Also Read | சுந்தர் சி - ஜெய் நடிக்கும் த்ரில்லர் படம் "பட்டாம் பூச்சி"..வெளியான 2nd சிங்கிள் பாடல்!
கதாநாயகனாக அறிமுகம்…
சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படங்கள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் அந்த கடைகளின் அதிபர் அருள் சரவணன். இதைத் தொடர்ந்து தற்போது கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவர் நடிப்பில் ஜேடி –ஜெர்ரி விளம்பர பட இயக்குனர்கள் இயக்கும் புதிய படத்துக்கு ’தி லெஜண்ட்’ என்றே பெயர் வைக்கபப்ட்டுள்ளது. இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இதற்கு முன்னர் உல்லாசம் மற்றும் விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள். அதன் பிறகு நூற்றுக்கணக்கான விளம்பர படங்களை இயக்கியவர்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களையும் அவர்களே இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணிக் கலைஞர்களோடு பிரம்மாண்டமாய்…
லெஜண்ட் படத்தில் சரவணாவுக்கு ஜோடியாக ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியை செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
’வாடிவாசல்’ பாட்டு
ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடலான Mosalo mosalu (மொசலோ மொசலு) ஆகியவை வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ஹாரிஸ் இசையில் வெளியான முதல் சிங்கிள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் மே 20 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியாகியுள்ள போஸ்டரும் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த பாடலின் சுவாரஸ்யமான அம்சமாக ‘வாடிவாசல்’ பாடல் என்று அறிவித்துள்ளனர். சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் விரைவில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8