லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
Also Read | பிரபல சினிமா தயாரிப்பாளர் VELS ஐசரி கணேஷின் தாயார் மறைவு
கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன், அதிக முன் பணம் கொடுத்து இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். சுமார் 30 கோடிக்கு இந்த படத்தின் உரிமையை அன்புச் செழியன் கைப்பற்றியுள்ளார்.
இந்த படத்தின் கேரளா ரிலீஸ் உரிமத்தை பிரபல மலையாள தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் ஸிஸ்டின் ஸ்டீபன் கைப்பற்றி உள்ளார்.
லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ திரைப்படம், எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது .
பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் ரசித்து மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறது.
ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் மற்றும் படக்குழுவினருடன் அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார்.
படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் கர்நாடக தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தரான செந்தில் கைப்பற்றி உள்ளார். இதற்கான ஒப்பந்தம் தயாரிப்பாளர் & வினியோகஸ்தர் முன்னிலையில் கையெழுத்தானது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
Also Read | BREAKING: அஜித் பட இயக்குனருடன் அடுத்த படத்தில் இணையும் அருண் விஜய்? ஆஹா.. ஷூட்டிங் எப்போ?